தனது குழந்தை அழகானதென்றும் நம்புகிறான்
பொன்மொழி
துணிவு போராட்டக் களங்களில்தான் பிறக்கும். -கி.வீரமணி
கடவுள் கடவுள் என்றெதற்கும்
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதைவிட என் 6 வயது மகனுக்கு மிகவும் பிடிக்கும்.எப்போதும் இந்த பாடலைத்தான் பாடிக்கொண்டிருப்பான்.இந்த பாடலை ஒலி வடிவில் கிடைக்குமா என இணையத்தில் தேடியபோது "தமிழ் அரங்க(ம்)"த்தில் கிடைத்தது.இதுபோன்ற பல நல்ல கருத்துள்ள பாடல்கள் பல அவர்களுடைய தளத்தில் கிடைக்கிறது.
பாடல்: புரட்சிக் கவிஞர்
இந்த பாடல் உபயம்: ம க இ க
படங்கள் உபயம்: ஓவியர் புகழேந்தி
ஆலோசனை: சூர்யா கண்ணன்
ஒருங்கினைப்பு : இனியன்
| எதிர்வினைகள்: |
வளைகாப்பு செய்வது ஏன்?
கருவுற்ற தாய்மார்களுக்கு இந்து மதத்தினர் செய்யும் சடங்கு வளைகாப்பு எனப்படுகிறது. முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் செய்கிறார்கள். மணப்பெண் போலவே பெண்களை அலங்கரித்து கைநிறைய வளையல்களை அடுக்குகிறார்கள். ஏன்?
முதல் பிரசவம் என்பது அக்காலங்களில் மிகவும் சிக்கலாக இருந்தது. பெண் குறைந்த வயதினளாக உடல் உறுப்புகள் முழுவளர்ச்சி அடையாத நிலையிலேயே உடல்உறவு கொண்டு சூல் அடைந்ததால் ஏற்பட்ட சிக்கல். இன்றைக்கிருப்பது போன்ற மருத்துவ உதவிகள், முறைகள் வளர்ச்சி அடையாதிருந்த காலம். தகுதி பெற்ற மருத்துவர்களிடமோ, மருத்துவமனைகளிடமோ, மருத்துவமனைகளிடமோ செல்லாமல் மருத்துவச்சிகள் என்பாரை நாடிப் பிரசவம் பார்த்துக் கொள்ளும் பழக்கம்.
இதனால், பிரசவத்திற்குப் பின் தாய் உயிருடன் திரும்பி வருவது மிகவும் கவலையும் சந்தேகமும் அளிக்கக் கூடியதாக இருந்த நிலை, செத்துப் பிழைத்தாயோ, பெத்துப் பிழைத்தாயோ என்ற வழக்குச் சொல் புழங்கிய காலம். பிரசவத்திறகுத் தாய்வீடு செல்லும் பெண் திரும்பி, கணவன் வீட்டிற்கு வருவதே அய்யமாகவும், அச்சமாகவும் இருந்த காலத்தில் - அச்சப்பட்ட மனிதன் ஆண்டவனை நினைப்பது சாதாரணமாக நிலவிய நிலை.
அந்தக் காலத்தில் சூலுற்ற பெண்ணைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று பயத்துடன் வேண்டிக் கொள்ளும் வகையில் வளைகாப்பை உருவாக்கிக் செய்தனர். பிழைப்பதே அரிது என்று கருதிய காரணத்தால் - பெண்ணை அலங்காரம் செய்து பார்த்துக் கொள்ளும் வகையில் மணப்பெண்ணைப் போலவே ஜோடித்தார்கள்.
ஏன் கைகளில் வளையல்களை அடுக்கினார்கள்? மங்கலமான பெண்ணின் அடையாளமாக, பூ,பொட்டு, மஞ்சள்,குங்குமம், வளையல், தாலி என்று இவர்கள் வகுத்த இலக்கணம். அதில் வளையலை மட்டும் நிறைய அடுக்கி அணிந்து கொள்ள முடியும். பத்து, அய்ம்பது தாலிகளையா, கட்டிக் கொள்ளமுடியும். ஆகவே வளையல்களை அடுக்கும் சடங்கைக் கொண்டு வந்தனர் போலும்
அத்துடன் மட்டுமல்ல திருமணம் செய்து கொண்ட பெண் என்பதற்கு அடையாளமாக அன்றைய காலத்தில் அணிவிக்கப்பட்டது வளையல்தான்! தாலி அல்ல! தாலி 1000 ஆண்டுகாலத்திற்கு முன்பு திணிக்கப்பட்ட சடங்கு. மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிட, தீவலம் வந்து திருமணம் செய்து கொண்ட கோவலன், கண்ணகியின் கழுத்தில் தாலி அணிவித்தாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. மாறாக - கோவலன் இறந்த சேதி கேட்டதும், கண்ணகி தன் கை வளையல்களை உடைத்தாள் என்று தான் சிலப்பதிகாரம் கூறுகிறது.
எனவே வளையல்களை நிறைய அணிவிக்கிறார்கள். தாலிகட்டும் சடங்கு திணிக்கப்பட்டாலும் கூட , திணிக்கப்பட்ட பிறகும் கூட பழைய பழக்கத்தை விடாமல் இருக்கின்றனர் என்பதற்காக இந்தச் சடங்கோ?
எப்படியிருப்பினும், மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட நிலையில் வளைகாப்பு தேவையா? சிசேரியன் சிகிச்சை முலம் பெற்றுக் கொள்வது என்று முடிவெடுத்தவர்களும் வளைகாப்பு நடத்திக் கொள்வது தேவையா?
எல்லாவற்றையும் விட, தமிழக ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகளில் வளைகாப்பு நடத்துவது தேவையா? அறிவுடைமையா?
நன்றி:விடுதலை
| எதிர்வினைகள்: |
மன்னித்துவிடு தந்தையே - சுபவீ
மாவீரனின் வீரம்
நோபல் பரிசு
| எதிர்வினைகள்: |
பழமொழிகள்
- அகத்தினழகு முகத்தில் தெரியும்
- அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்கவேண்டியதில்லை
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
- அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
- அடியாத மாடு படியாது.
- அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
- அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
- அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
- அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
- அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
- அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
- அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
- ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
- ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
- ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
- ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
- ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
- ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
- ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
- ஆழம் தெரியாமல் காலை விடாதே.
- ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
- ஆனைக்கும் அடிசறுக்கும்.
- இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
- இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
- உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
- ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
- எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
- எறும்பூரக் கல்லும் தேயும்.
- ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
- கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
- கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
- கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
- கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
- கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
- கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
- கழுதை அறியுமா கற்பூர வாசனை?
- காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
- காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்
- காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
- காகம் திட்டி மாடு சாகாது.
- காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
- காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
- காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
- கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
- குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
- குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
- குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
- குரைக்கிற நாய் கடிக்காது.
- கூட்டுற வெலக்குமாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்
- கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
- கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிப்பதுபோல
- கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
- கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
- கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
- சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
- சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
- சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி கேட்டானாம் புல்லட்
- சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
- சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
- சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
- சோளியன் குடுமி சும்மா ஆடுமா?
- தடியெடுத்தவன் தண்டக்காரன்.
- தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
- தன் வினை தன்னைச் சுடும்.
- தனிமரம் தோப்பாகாது.
- தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
- தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
- தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
- தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
- தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
- நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
- நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
- நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
- நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
- நிறைகுடம் தளம்பாது.
- தாட்சண்யவான் தரித்திரவான்
- பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
- படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
- பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
- பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
- பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
- பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
- பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
- பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
- பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
- புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
- புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
- பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
- பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
- போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
- மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்துக்கட்டு விலக்குமாரு
- மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
- மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
- முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
- முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
- மைத்துணன் உதவி மலைபோல
- மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
- யானை படுத்தாலும் குதிரை மட்டம்
- யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
- யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
- வழியோடு போய் வழியோடு வந்தால் அதிகாரி சுண்டைக்காய்க்குச் சமம்
- விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
- விரலுக்குத் தக்கதே வீக்கம்.
- விளையும் பயிரை முளையிலே தெரியும்.
- வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
- வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
- வெளுத்ததெல்லாம் பாலல்ல.
- வேலிக்கு ஓணான் சாட்சி.
- வைக்கோற் போர் நாய் போல.
நா.முத்துக்குமார் கவிதை
ஈசல் வறுத்து அனுப்பியிருக்கிறாள்
பொரி அரிசியுடன் கலந்து
அம்மா வறுக்கும்
ஈசல்களின் ருசி
மதுரை ஸ்ரீமுனியாண்டி விலாஸ் (ஒரிஜினல்)
ஓட்டல்களின்
சமையலறைக்குப் புலப்படாதது
வேட்டைகளில்
விருப்பமுள்ளவன் நான்
காடாவிளக்கும்
கொஞ்சமே கொஞ்சூண்டு
குழந்தை குதூகலமும் போதும்
ஈசல் வேட்டையாட
வறட்டி தட்டுவதற்கு
சாணம் கொட்டிவைத்த நிலத்தில்
ஈசல் குழிகள் ஏராளமிருக்கும்
கூளத்திற்காய் குவித்த
வைக்கோல் துணுக்குகளில்
முளைவிட்டிருக்கும்
நெல் மணிகளை
மிதிக்காமல் நெருங்கி,
கண்ணாடி ரெக்கைகள்
உள்ளங்கையில் குறுகுறுக்க
கொத்தாகப் பிடிப்போம்
அந்தியில் பறக்கும் ஈசல்களிடமிருந்து
அடைமழைக்கான
சாத்தியங்கள் தேடும்
வயதைத் தொலைத்து,
நதியில் நடந்த பாதங்கள்
நகரத்திற்கு வந்து
நாளாயிற்று
இப்போதும்
வேட்டையாடிக்கொண்டுதானிருக்கிறேன்
காகிதத்தில் எண்ணெய் தோய்த்து
விளக்கிற்கடியில் தொங்கவிட்டு
கொசுக்களை
காசி ஆனந்தன் கவிதைகள்
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது
| எதிர்வினைகள்: |
கலைந்தது கரு
கலைந்தது கரு
அழுதாள் மனைவி
உடல்வலியும் உள்ள(ம்)வலியும்
அதிகம் என்பதாலா?
இல்லை இல்லை!
அவன் அவளோடு
பேசவில்லையாம்.
-இனியன்-
நா.முத்துக்குமார் கவிதை
என்பதற்கு மூன்று காரணங்கள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.
இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்.
நா.முத்துக்குமார்
"எங்கள் நாடு தமிழ்நாடு; இங்கு ஏதடா இந்து நாடு?"
"எங்கள் நாடு தமிழ்நாடு; இங்கு ஏதடா இந்து நாடு?" என்பது நமது பேரணியில் விண்ணை இடிக்கும் முழக்கமாகும்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவில் எந்தப் பகுதியில் சங் பரிவார்க் கும்பல் மாநாடு நடத்தினாலும், பேரணி நடத்தினாலும் எழுப்பப்பட வேண்டிய முழக்கம்.
ஆந்திராவில் நடந்தால்கூட, "எங்கள் மாநிலம் ஆந்திரம். இங்கு ஏதடா இந்துத்துவம்?" என்ற குரல் உக்கிரமாக எழும்பவேண்டும்.
காரணம்,
இந்துத்துவா, இந்து நாடு என்று எதை உச்சரித்தாலும் அதன் உட்பொருள் ஒன்று கத்திமுனையாக இருக்கிறது.
ஆம், ஆரியர்கள் - பார்ப்பனர்கள் தங்களின் ஆதிக்க நங்கூரத்தைச் செலுத்தச் செய்யும் ஏற்பாடு அது.
வருணாசிரமக் கொடியை ஆரியம் மீண்டும் இம்மண்ணிலே ஊன்றிட மேற்கொள்ளும் ஒத்திகை அது.
அவர்கள் பிராமணர்களாக இருக்கவேண்டும் என்பதைவிட, நாம் சூத்திரர்களாக இருந்து தீரவேண்டும் என்பதில்தான் அக்கறை அவர்களுக்கு அதிகம்.
கோவையிலே சங் பரிவாரின் மாணவர் பிரிவான (ஏபிவிபி) அகில பாரத் வித்யார்த்தி பரிஷத் மாநாடு கூட்டி நம்மை சவாலுக்கு இழுத்துள்ளனர்.
பெரியார் மண்ணில் இந்த பெருச்சாளிகள் பேரிகை கொட்ட முன்வந்துள்ளனர்.
இந்தக் கூட்டம் எதைச் செய்தாலும் அதற்குப் பதிலடி கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள் நாம்.
திருச்சி மாநகரத்திலே ஹிந்து இளைஞர் மாநில மாநாட்டை நடத்தியது அக்கூட்டம் (பிப்ரவரி 8, 9- 2003).
திரிசூலங்களை வழங்கி - வெளிப்படையாகவே வன்முறைக்கு வெற்றிலைபாக்கு வைத்து அழைத்தனர். ஜெயலலிதா அம்மையார் ஆட்சியிலே அந்த அட்டகாசத்துக்கு வெண்சாமரம் வீசப்பட்டது.
சிறுபான்மையினர்களின் குடலை உருவும் இந்தத் திரிசூலம் என்று பிரவீன் தொகாடியா தொண்டை கிழியக் கத்தினார் - கண்டு கொள்ளவில்லை முதலமைச்சராகவிருந்த ஜெயலலிதா அம்மையார்.
வன்முறை எதிர்ப்பு வரிசையில் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று இறுமாந்து பேசும் அக்ரகாரத்து அம்மையாருக்கு சங் பரிவார் வகையறாக்களின் சங்கதி என்றதும், சங்கீதக் குரலாக இனித்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை திராவிடர் கழகம். அதே திருச்சியிலே திராவிடர் மாணவர் கழக மாநில எழுச்சி மாநாட்டினை அடிக்கு அடி என்பதுபோல நடத்திக் காட்டினோம்! (2.3.2003).
ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கைகளில்தான் கொம்பு இருக்குமா? இதோ பார் இங்கே என்று சட்டத்திற்குட்பட்ட முறையிலே கொள்கையிடி முழக்கமிட்டு ஏந்திச் சென்றோம்.
"அடேயப்பா எங்கே இருந்து புறப்பட்டது இந்தக் கறுஞ்சிறுத்தைக் கூட்டம்!" என்று திருச்சியே திரண்டு நின்று திகைத்துப் பார்த்தது.
கோவையிலே கூடி, நமக்கு மீண்டும் வேலை கொடுத்துவிட்டது காவிக் கும்பல்!
அதுவும் நல்லதுதான். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியிலே மகத்தான முறையில் கொள்கை உணர்வை ஊட்டிட ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்கிற முறையிலே கிளர்ந்து எழுந்துவிட்டோம்.
திருப்பூர் என்றாலே திருப்பம் தரும் ஊர் என்று பொருள். அய்யா அவர்களை அறிஞர் அண்ணா சந்தித்து, அய்யாவிடம் அடைக்கலம் ஆன ஊர் இந்தத் திருப்பூர்தான்.
மனுதர்மத்தையும், இராமாயணத்தையும் தீயிட்டுக் கொளுத்தவேண்டும் என்று திராவிட இயக்கப் பேராசான் தந்தை பெரியார் தீப்பொறி பறக்கப் பேசியதும் இதே திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில்தானே! (1922).
மீண்டும் இப்பொழுது திருப்பூரிலே கூடுகிறோம் - தீப்பொறித் தீர்மானங்களை தீட்டுகிறோம் - கோடையிடியென கொள்கை முழக்கம் போடுகிறோம்.

அது பேரணியல்ல - போரணி என்று நாளைய வரலாறு பேசும் அளவுக்கு எழுச்சித் தீ மண்ணையும், விண்ணையும் அளக்கட்டும்! வா தோழா, வா!
இந்து எழுச்சியாம்! குருக்ஷேத்திரமாம்!
சந்து முனை சிந்துபாடிகளே
சரித்திரம் தெரியுமா உங்களுக்கு?
நீறுபூத்த நெருப்பானாலும்
நெருப்பு நெருப்பே!
வீறுகொண்ட வேங்கைமுன்பா உம் விளையாட்டு?
செல்லாது! செல்லாது! ஒருபோதும் செல்லாது!
வாலி வதம், சம்பூகன்
தலையறுத்தல் பழைய கதை!
காலி வதம், காவி விரட்டல்
எம்புதிய வேலை!
விரல் உரலானால்
உரல் என்னவாகும்? என்று கேட்டவர்
எம் ஆசான், பெருமான், நல்லாசான்
வாராய் எம் தமிழா!
வசைபாடும் வாய்த் துடுக்கரின்
வல்லாண்மைக்கு முடிவு கட்ட!
வா தமிழா, வா!
வாகை சூட வா!
வரலாறு படைக்க வா!
திருச்சி மாணவர் மாநாட்டின்போது தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நமக்கெல்லாம் விடுத்த அழைப்புக் கவிதை இது.
திருப்பூருக்கும் பொருந்தும்தானே!
திரண்டிடுவீர்!
தீரர் கோட்டமென
தீட்டுவீர் புதிய காவியத்தை!விடுத்தலையில், கோவை மண்டலம் அழைக்கிறது-கூடுவீர் திருப்பூரில்! எனும் தலைப்பில்- மின்சாரம் அவர்களின் கட்டுரை
அய்யாவை நம்பினோம்
அய்யாவை
நம்பினோம்
நமக்குப்
பல்கலைக் கழகங்கள்
கிடைத்தன !
பல்கலைக் கழகங்களில்
படித்த
இவர்களை
நம்பினோம்
நமது
அறிச்சுவடிகளும்
தொலைந்து போயின !
-கவிஞர் அறிவுமதி
| எதிர்வினைகள்: |
காசி ஆனந்தன் கவிதைகள்
போராளிகள்
செத்துக் கொண்டிருக்கும்
மண் என்கிறார்கள்
எம் மண்ணை .
திருத்தினேன்
போராளிகள்
பிறந்து கொண்டிருக்கும் மண்
-காசி ஆனந்தன் -
உங்களுக்குத் தெரியுமா?
| எதிர்வினைகள்: |
பொன்மொழிகள்
பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிட
புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடவேண்டும்.
- தந்தை பெரியார் -
புகழே! நீ ஒரு நிழல். உன்னைப்பற்றிக் கவலைப்படாதவர்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறாய் ! - கலைஞர் மு. கருணாநிதி -
நம்பிக்கையைக் கைவிடாதே! அதுதான் வெற்றியின் முதல்படி!
- அறிஞர் அண்ணா -
உங்களுக்குத் தெரியுமா?
| எதிர்வினைகள்: |
